சுங்குவார்தோப்பு உத்சவத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 03:03
காஞ்சிபுரம்; சுங்குவார்தோப்பு உத்சவத்தில், இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் சிவபால முருகன் எழுந்தருளினர்.
காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், சுங்குவார்தோப்பு உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மக தினத்தன்று, இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். நடப்பாண்டு மாசி மகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமிகள் எழுந்தருளினார். திருவூரல் உற்சவத்திற்கு பின் அவளூர் கிராமத்திற்கு எழுந்தருளினார். அதே தினத்தில், சியமங்கலம்பேட்டை சிவபாலமுருகனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.