பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இடும்பன் மலை கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் சக்தி கிரி என ழைக்கப்படும் இடும்பன் மலையில் 15 அடி உயர இடும்பன் சிலை உள்ளது. மேலும் விநாயகர் முருகர் அகத்தியர் சிலைகள் உள்ளன நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இடும்பன் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது அதன் பின் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.