Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெயர்ச்சியாகிறார் சனீஸ்வர பகவான்; ... செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர் விநாயகர் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
 கூடலூர் விநாயகர் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மார்
2026
02:03

கூடலூர்; கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 40வது ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடந்தது

கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் 40வது ஆண்டு தேர் திருவிழா 27ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி சிறப்பு யாக பூஜை, கொடிமர கும்ப பூஜை ஹோமம் பூர்ணாஹுதி, 8:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாதார நிகழ்ச்சிகள் நடந்தது. 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 3ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், காலை 5:00 மணிக்கு அருள்மிகு சக்தி விநாயகர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், சிறப்பு கும்ப பூஜை யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள், கோபுர விமான மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. தேரை கூடலூர் டி.எஸ்.பி., வசந்தகுமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் ஊர்வலம் மேல்கூடலூர் மாரியம்மன் கோவில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில், கோழிக்கோடு சாலை டி.கே., பேட் வரை சென்று, நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு கோவில் வந்தடைந்தது. தொடர்ந்து தீபதாரணை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar