திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2026 05:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா, திருக்கல்யாண வைபவத்துடன் இன்று நிறைவடைந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி தேர்த்திருவிழா நடந்தது. 2ம் தேதி மாசி மக தெப்பத் திருவிழா நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 8:00 மணிக்கு கந்தபெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. பக்தர்கள் சீர்வரிசைகளுடன் உற்சவ மண்டபத்தில் குவிந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்திற்கு பின் வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கந்தபெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். கோவில் வளாகத்தில் கேரள மாநிலம், கோழிகோடு திருப்பழனி தைப்பூச அன்னதான சங்கத்தின் சார்பில் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.