வெள்ளேரிதாங்கல்: வெள்ளேரித்தாங்கல் பெரியபாளையத்தம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் மிகவும் பழமையான பெரியபாளையத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து முதல்கால யாக பூஜையும் பூர்ணாஹூதியும் நடந்தது. மறுநாள் 4ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் தீபாராதனையும் நடந்தது. கும்பாபிஷகே நாளான நேற்று காலை நான்காம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. பின் காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்திற்கும், மூலவர் பெரியபாளையத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின் மாலையில் பெரியபாளையத்தம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.