Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் மார்ச் 17ல் கோயில் ... அருவங்காடு ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின விழா; சுவாமி வீதி உலா அருவங்காடு ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரருக்கு 48 நாட்கள் இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனிப்பெயர்ச்சி; மொரட்டாண்டி சனீஸ்வரருக்கு 48 நாட்கள் இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

06 மார்
2026
07:03

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, நல்லெண்ணெய் அபிஷேகம் துவங்கியது.


நவக்கிரங்களில் முதன்மையானவரான சனீஸ்வரர் இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைகள் நேற்று தொடங்கியது. மதியம் கோவில் வளாகத்தில் உள்ள 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


மாலை முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:௦௦ மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு 80 அடி உயர மகா கும்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக அமைத்துள்ள கொப்பரையில் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் தங்களுடைய முகத்தையும், விநாயகர் மற்றும் சனி பகவானின் திருமேனியையும் தரிசித்து, சனி தோஷத்திலிருந்து விடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 48 நாட்களுக்கு அபிஷேகம் சனிப் பெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில் உள்ள 12 அடி உயர சனீஸ்வரருக்கு இன்று காலை 6:00 மணி முதல் 48 நாட்களுக்கு இடைவிடாது நல்லெண்ணெய் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 3 அடி உயர சனீஸ்வரருக்கு, பக்தர்களே நேரடியாக நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar