தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு விடுமுறை தினமான நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தேவிபட்டினம் கடலுக்குள் உள்ள நவபாஷாண நவக்கிரகம் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி, பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினம் என்பதால், மற்ற நாட்களை விட நேற்று தரிசனம் செய்ய நவபாஷாணத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து சென்றனர்.
தொடர்ந்து, நவக்கிரக பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.