பதிவு செய்த நாள்
09
மார்
2026
01:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், மலைக்கோவிலில் மட்டும், 45 திருமணம் நடந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். நேற்று விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த நாள் என்பதால், மலைக்கோவிலில் 45 திருமணங்களும், திருத்தணி நகரில் தனியார் திருமண மண்டபங்களில் 60 திருமணங்களும் நடந்தன.
திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கமான பக்தர்கள் என, ஆயிரக்கணக்கானோர் மலைக்கோவிலில் குவிந்தனர்.
இதனால், பொது வழியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.