கடம்பத்துார்: களியனுார் பொன்னியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கடம்பத்துார் அடுத்துள்ளது களியனுார் கிராமம். இங்குள்ள பொன்னியம்மன் கோவிலில், கடந்த 6ம் தேதி இரவு கும்பாபிஷேக விழா துவங்கியது.
மறுநாள் கணபதி ஹோமமும், முதல் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன், பரிவார தெய்வங்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், களியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.