Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் விஷ்ணு ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில்  மேற்கு நுழைவாயில் அமைப்பு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதாசிவ தேவராயர் கல்வெட்டு செஞ்சி அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
சதாசிவ தேவராயர் கல்வெட்டு செஞ்சி அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

18 மார்
2026
11:03

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை, சிட்டாம்பூண்டியை சேர்ந்த ஆசிரியர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இது குறித்து தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தமிழக தொல்லியல் துறை சார்பில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு, கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் சேர்ந்து, எங்களிடம் பயிற்சி பெற்ற ஆசிரியர் வடிவேலு, சமீபத்தில் அவரது ஊரில் கள ஆய்வு செய்துள்ளார். அப்போது, லட்சுமணன் என்பவரின் நிலம் அருகில், ஒரு கல் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து, அதை ஆய்வு செய்தார். அதில், 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் எழுத்துக்கள் இருப்பதை அறிந்து, அதன் மைப்படியை எனக்கு அனுப்பி வைத்தனர். அதை படித்து தகவல் அனுப்பினேன். அதன்படி, கடந்த 1550ல் வெட்டப்பட்ட கல்வெட்டில், தமிழ் ஆண்டான சாதாரண ஆண்டு, கார்த்திகை மாதத்தில், இது வெட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், திம்மப்ப நாயக்கர், மடாதிபதி ஒருவருக்கு மடம் ஏற்படுத்தி, நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.  அந்த நிலத்துக்கு கேடு விளைவிப்போர், கங்கையில் காராம்பசுவை கொன்ற பாவத்தை அனுபவிப்பர் என கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் முடிவில், சிவலிங்கம், திரிசூலம் கோட்டு உருவங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அதனால், இது, சைவ மடம் உருவாக்கி, நிலதானம் செய்ததை உறுதி செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar