வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மேற்கு நுழைவாயில் அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2026 11:03
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மேற்கு பகுதியில் நுழைவாயில் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இந்தாண்டு நடைபெற உள்ளது. அதற்காக கடந்தாண்டு டிச.,ல் பாலாலய பூஜை துவங்கின. இந்நிலையில் கோயில் சித்திரை திருவிழா மே 12 முதல் 19 வரை நடக்க உள்ளது. இந்நிலையில் கோயில் மேற்கு சுற்றுச்சுவரில் சிறிய பகுதி இடித்து மூடி வைக்கப் பட்டுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயிலில் மேற்கு நுழைவாயில் அமைக்க ஹிந்து அறநிலையத்துறை 2 மாதங்களுக்கு முன் அனுமதி வழங்கியது. ரூ.8.80 லட்சத்தில் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. கோயில் திருவிழா துவங்கும் முன் அதனை அமைக்க முடிவு செய்து பணிகள் நடந்து வருகிறது. இதனை அவசர கால வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.