பரமக்குடியில் கள்ளழகர் நாளை அழகர் கோயிலுக்கு திரும்புகிறார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2026 07:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் நாளை பூப்பல்லத்தில் கோயிலுக்கு திரும்புகிறார். இங்கு மே 1 அதிகாலை பூ பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார். தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஏறி தல்லாகுளத்தில் இருந்து வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். அங்கிருந்து சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தும், தசாவதார திருக்கோலத்திலும் அருளினார். மேலும் வைகை ஆற்றில் கருட வாகனத்தில் அமர்ந்தார். இன்று இரவு ராஜாங்க திருக்கோலத்தில் பட்டு பல்லக்கில் இருந்தார். நாளை காலை 7:00 மணிக்கு பூ பல்லக்கில் அழகர் அமர்ந்து வைகை ஆற்றில் இருந்து கிளம்பி நகர்வலம் வந்து மாலை 5:00 மணிக்கு மேல் மீண்டும் திருக்கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கும்.