குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா: பூஞ்சோலை சென்ற அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2026 10:05
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் முத்தாலம்மன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.பின்னர் நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.