Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடமையினைச் சரிவர செய்ய வழிகாட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

சென்னை: வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை, வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா மே 21ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாள் பிரம்மோத்சவ விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலி்ததார். விழாவில் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா , 25ம் தேதி நாக வாகனத்தில் சுப்பிரமணியர், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான, இன்று 27ம் தேதி காலை தேர் திருவிழா நடைபெற்றது. இன்று காலை 7:05 மணி முதல் 7:25 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. குதிரை வாகன புறப்பாடு, 28ம் தேதி நடக்கிறது. 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை 7:35 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 9:00 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று 5 தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
காத்மாண்டு: நேபாளத்தில் விஜயயாத்திரை செய்து வரும் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
 திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்த வெள்ளித்தேர் 1990களில் தீக்கிரையானது. அதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar