Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...  கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்  கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் மங்களநாயகி அம்மன் தேரோட்டம் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் மங்களநாயகி அம்மன் தேரோட்டம் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

விருத்தாசலம்: மங்களநாயகி அம்மன் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம்பிடித்து தேரை இழுந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், பழமை வாய்ந்த மங்களநாயகி அம்மன் கோவிலில், வைகாசி மாதப் பெருவிழா, கடந்த 12ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தினசரி அம்மன் ரிஷபம், குதிரை, காமதேனு, யானை உள்ளிட்ட சிறப்பு வாகனங்களில் அமர்ந்து வீதியுலா வந்து அருள்பாலித்தார். மேலும், கடந்த 23ம் தேதி பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார் வழியாக கோ.பூவனுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அம்மன் சென்று ஆசிபெறுதல், 24ம் தேதி காலை கர்னத்தம் கிராமத்தில் அண்ணன் வீட்டிற்கு சென்று வருதல் உள்ளிட்ட ஐதீக நிகழ்ச்சிகள் நடந்தது.

முக்கிய நிகழ்வாக, இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, மங்களநாயகி அம்மன் கோவில் வாசலில் எருமை கிடா பலியிடப்பட்டு, உற்சவ மூர்த்தி மேளதாளங்களுடன் புறப்பட்டு, தேரில் எழுந்தருளியது. பின்னர், தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்ததும், மகிஷா வாகனத்தில் மங்களநாயகி உற்சவர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கிராம மக்கள் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி, அன்னதானம் நடக்கிறது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமயில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஏழு ஆண்டிற்கு பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ தேர் ... மேலும்
 
temple news
 கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.கடலுார், ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar