Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை ...  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அத்துமீறும் வியாபாரிகள்: பக்தர்கள் தவிப்பு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ‘கோசாலை’ திருத்தணி கோவில் நிர்வாகம் அலட்சியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ‘கோசாலை’ திருத்தணி கோவில் நிர்வாகம் அலட்சியம்

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாடுகளை பாதுகாக்கும் மையமான ‘கோசாலை’ கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், மாடுகளை பாதுகாக்கும் மையமான ‘கோசாலை’ அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு அங்கு இடவசதி இல்லாததால், பல்வேறு காரணங்களை கூறி, கோவில் நிர்வாகம் பசுக்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தில், கோசாலை அமைந்துள்ள இடத்தில் மழை நீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி, மாட்டுச்சாணத்துடன் சேர்ந்து, கோவில் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே, மாற்று இடத்தில் ‘கோசாலை’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தெற்கு மாட வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், ‘கோசாலை’ அமைக்க முடிவானது.

அதன்பின், மூன்று ஆண்டுகளுக்கு முன், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ‘கோசாலை’ அமைக்கும் பணி துவங்கியது. கட்டுமான பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், ‘கோசாலை’யை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கோவில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். அதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டுள்ள ‘கோசாலை’யை, விரைவில் பயன்பாட்டற்கு கொண்டு வர, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar