கவிழ்ந்த மாரியம்மன் கோவில் தேர்; நிலை நிறுத்தி மீண்டும் இழுத்து சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2026 09:05
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தேர் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் மாரியம்மன் கோவில் ஆண்டு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல் இவ்வாண்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உடன் தினமும் மாலையில் அம்மன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாரியம்மன் மரதேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை 3 மணிக்கு மரதேர் இழுக்கும் போது எதிர்பாராத விதமாக தேர் அருகிலுள்ள வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமலும், தேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கவிழ்ந்ததால் சிறிது நேரத்தில் தேரை நிலை நிறுத்தி மீண்டும் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.