திருப்புத்துார் சூரமாகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2026 09:05
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கோட்டையிருப்பு சூரமாகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
வைகாசி முதல் செவ்வாயன்று இங்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. பக்தர்கள் விரதத்தை துவக்கினர். இரண்டாம் செவ்வாயன்று 18ம் படி கருப்பர் கோயில் வீட்டு திடலில் சாமி ஆட்டம் நடந்தது. அங்கு கிடாய் பலியிட்டும், சாமியாடி கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலுக்கு வந்தனர். பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், ஆண்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.