பதிவு செய்த நாள்
28
மே
2026
10:05
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் பிரசித்தி பெற்ற, முருகன் கோவில் உள்ளது. கோவிலின் புதிய கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்வாக நேற்று காலை, 7:00 மணிக்கு, பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் பஞ்சகாவியம், தனபூஜை, தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகள், மற்றும் மகா கணபதி ஹோமம், தீர்த்த பிரசாத விபூதி வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், ஸ்தபதி உபச்சாரம், கோபுர விமான கலசங்களில் கலச ஸ்தாபனம் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. மகா கணபதி ஹோம பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள். சிவ ஸ்ரீ ராஜசேகர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.