Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பூர் மாரியம்மன் கோயில் ... நாட்டரசன் கோட்டையில் நாட்டுக்கோட்டைபொங்கல்! நாட்டரசன் கோட்டையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
05:01

பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. பாம்பு கணபதியின் இடுப்பு கச்சையாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது. சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு.  பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகிறது, இருந்தால் ஆசனமாகிறது, படுத்தால் பாயாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங்களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரசமரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தி மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். பாம்பு வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர்.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என பாளை.,யில் நடந்த கருத்தரங்கில் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் தெரிவித்தார். பாளை.,யில் விஷப் பாம்புகளை கண்டறிவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் உசிலம்பட்டி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் பாம்புகளை கையில் ஏந்தி, அதன் குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் பாம்பு பற்றிய தவறான தகவல்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசியதாவது; பாம்பு விஷமுள்ளது, விஷமற்ற என இரண்டு விதமாக உள்ளது. பாம்பில் விஷமுள்ளவைகளின் கருவிழிகள் நீளமாக இருப்பதோடு, செதில் சிறியதாகவும், தலை முக்கோண வடிவில் பெரிதாக இருக்கும். விஷமற்ற பாம்புகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கும். பாம்பு பெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. நாம் அதை மிதித்தாலோ அல்லது ஆபத்து நேரத்திலோ அல்லது உணவுக்காக கடிக்கும் பழக்கம் கொண்டுள்ளது. பாம்பு நம் அருகில் செல்லும் போது அசையாமல் இருந்தால் கடிக்காது.

பாம்பு கடிக்கும் பட்சத்தில் பதட்டப்படாமல், முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். பாம்பு கடித்து இறப்பவர்களை விட, பாம்பு கடித்த பயத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மனிதனில் எந்த உடல் உறுப்பில் கடித்ததோ அந்த பகுதியில் கயிறு அல்லது ரப்பர் டியூப் மூலம் தளர்வாக கட்ட வேண்டும். கடிபட்ட பகுதியில் சுத்தாமான நீரை கொண்டு உப்பு சோப்பு மூலம் கழுவலாம். கடித்த பாம்பு எது என்பதை தெரிந்தால் ஆஸ்பத்திரியில் விரைவாக சிகிச்சை பெற முடியும். பாம்பு இனத்தில் பச்சபாம்பு, மண்ணுளி பாம்பு, இருதலைபாம்பு போன்றவை மட்டுமே குட்டி ஈன்று எடுக்கும். மற்ற பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும்.

பாம்பு பிறக்கும் போதே பல்லோடு பிறப்பதால், பிறந்த சில மணி நேரத்திலேயே வேட்டையாடும் குணம் அதற்கு தானாக உருவாகிறது. பாம்பின் விஷத்தில் 75 சதவீத புரோட்டீனும், 25 சதவீதம் விஷ தன்மை கொண்ட எண்சைம்களும் உள்ளன. பாம்பின் விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 25 விஷ பாம்புகளில் இருந்து ஒரு மில்லி கிராம் விஷம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதன் விலை அதிகமாகும். பாம்பிற்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால், பாம்பிற்கு நினைவு சக்தி கிடையாது. ஒரு சில பாம்புகள் முட்டை சாப்பிடுகின்றன. எந்த பாம்பும் பால் சாப்பிடுவதில்லை. பாம்பு கடித்து சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே செரிக்கிறது. பாலின் அடர்த்தி அதிகம் என்பதால் செரிக்காமல் பாம்பு இறந்து விடும். உலகில் 2 தலை பாம்பு உள்ளதே தவிர 5 தலை பாம்பு கிடையாது. ஒரு சில பாம்பிடம் நாகரத்தினம் இருப்பதாக கூறுவது மூட நம்பிக்கையாகும். நாகரத்தினம் இயற்கையாக கிடைக்கும் பொருளாகும். வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளிடையே சண்டை ஏற்படுவது இயற்கையாகும். அதுபோல் பாம்பு-கிரி சண்டையும் இயற்கையானத தவிர, பரம்பரை எதிரிகள் கிடையாது.

பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்பு மனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும். ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது. மாறாக அ பாம்பு கடிக்கு "ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு ஸ்நேக் ரமேஷ் தெரிவித்தார்.

பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்றும், அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை என்றும் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar