Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச விழாவில் முதுகில் அலகு ... நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 31ம் தேதி தைப்பூச மஹா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
11:01

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மஹா தரிசனம், 31ம் தேதி நடக்கிறது. அன்று முருகப்பெருமானை தரிசிக்க சென்னிமலை நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர். பக்தி பரவசத்துடன் மேளதாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று நிலை சேர்ந்தது. இன்று செவ்வாய் இரவு பரிவேட்டை, குதிரை வாகன காட்சி நடக்கிறது. புதன்கிழமை இரவு தெப்போற்சவம், பூதவாகனக்காட்சி நடக்கிறது. மஹா தரிசனமான வியாழக்கிழமை (31ம் தேதி) அன்று காலை வள்ளி,தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு நடராஜபெருமானும். சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா காட்சி இரவு முழுவுதும் நடக்கும். இதை காண, சென்னிமலை நகரில் லட்சக்கனக்காண பக்தர்கள் கூடுவர். அன்று அதிகாலை, 5 மணி வரை ஸ்வாமி திருவீதி நடக்கும். வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் பசவராஜன் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar