Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூரத்தாழ்வான் கோவிலில் தேரோட்டம்! அமர்நாத் யாத்திரிகர்களுக்கு உடல் தகுதி சான்று கட்டாயம்! அமர்நாத் யாத்திரிகர்களுக்கு உடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 கலைஞர்கள் திருவையாறில் பிரமாண்ட இசை விருந்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
10:02

தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜர் சுவாமி, 166வது ஆராதனை விழாவில், ஒரே நேரத்தில், 1,000 கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, இசை விருந்து படைத்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படும். கடந்த, ஐந்து நாட்களாக நடந்த ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. திருவாரூரில், ராமபிரம்மம், சீதம்மா தம்பதிக்கு, 1767 மே, 4ம் தேதி, தியாகராஜர் சுவாமி பிறந்தார். எட்டு வயதிலேயே இசைஞானம் பெற்று, இசைஞானியாக திகழ்ந்தார். ராமபக்தராக விளங்கினார்; சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றினார். இதில், பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது. இறுதியாக, 1847 ஜன., 6ம் தேதி, தை மாதம் பகுள பஞ்சமி திதியில், தியாகராஜர் சுவாமி, திருவையாறில் முக்தி அடைந்தார். முக்தி தினமான நேற்று, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, பிரதான நிகழ்ச்சியில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை, 1,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள், பாடகர்கள் ஒரே நேரத்தில் இசைத்தனர். ஆராதனை விழாவில், தனித்தனியாக பிரபல சினிமா பாடகர்கள் ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோர், பாடல்களை பாடி பரவசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனையில், முன்வரிசையில் சிவ சிதம்பரம், சுதா ரகுநாதன் மற்றும் கலைஞர்கள் மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, ப்ரியா சகோதரிகள் பாடினர். முன்னதாக, காலை, 7:00 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, அவரது சமாதியில் எழுப்பப்பட்ட சிலையை வந்தடைந்து தீபாராதனை, பூஜை, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, இரவில் ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar