திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2026 05:08
காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பெறும் ஆவதிப்பட்டு வரும் நிலையில் இன்று ஆடி 4வது சனிக்கிழமையில் என்பதால் திருநள்ளார் கோவிலில் பக்கர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிஸ்கட். தண்ணிர் வழங்கப்பட்டது. கூடுதலாக அன்னதானம் ஆலய உள்புரங்களில் கூடுதல் மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சனீஸ்வரபகவான் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.