Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி உறையூர் வளைகாப்பு விழா பழநிகோயில் முக்கிய வீதிகளில் குவியும் திருவிழாக்கால குப்பை பழநிகோயில் முக்கிய வீதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் பெயரில் வசூல் நடத்திய கோயில்: கையகப்படுத்தியது அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 பிப்
2013
10:02

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ராமர் பெயரில் மிதக்கும் கல் வைத்து, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்திய, கோயில் மற்றும் மடத்தை, இந்து அறநிலையத்துறையினர் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் அருகே, தனியார் நிர்வகித்து வந்த துளசி பாவா மடத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இதனுள் தண்ணீரில் மிதக்கும் சுண்ணாம்பு கல்லை, தொட்டியில் போட்டு, இலங்கைதனுஷ்கோடி இடையே ராமர்பிரான் பாலம் அமைக்க, பயன்படுத்தி "மிதவை கல் இதுதான் எனக் கூறி, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தினர்.இதுகுறித்து, இந்து அறநிலையத்துறைக்கு, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. கோர்ட் உத்தரவுப்படி, பிப்.1 பஞ்சமுக ஆஞ்சநேயர், துளசி பாவா மடத்தை ராமநாதபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் ஊழியர்கள் கையப்படுத்தினர்.இதற்கான நோட்டீசை, மடத்தின் நிர்வாகி மோகன்தாசிடம் வழங்கினர். ஒரு நகலை கோயில் சுவரில் ஒட்டினர். "மிதக்கும் கல்லை காட்டி பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என, எச்சரித்தனர். இதற்கு மடத்தின் நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். கையகப்படுத்திய கோயிலுக்கு,இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம், தக்கராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக, இக்கோயிலில், கூடுதலான வருவாய் கிடைப்பதாக வந்த தகவøலையடுத்து, எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு  வரப்பட்டுள்ளது. இங்குள்ள ராமர், லட்சுமணர், சீதா உள்ளிட்ட ஐந்து உலோக சிலைகள், 16 மிதவை கற்களை கையப்படுத்தினோம். இம்மடத்திற்கு சொந்தமான, 75 சென்ட் நிலம் விற்கப்பட்டுள்ளது, இதை சட்டரீதியாக மீட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதுகுறித்து துளசிபாவா மடம் நிர்வாகி மோகன்தாஸ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பிற ஆதீன மடம் போன்று தான், இதை நிர்வகித்து வருகிறோம். முன் அறிவிப்பின்றி, இந்து அறநிலையத்துறையினர் எங்கள் மடம், கோயிலை கைப்பற்றியதை கண்டிப்பதுடன், மீட்க, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar