Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோயில் மாசி ... திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்! திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓய்வு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் கோயில் பணியாளர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

தேனி: அறநிலையத்துறை கோயில் பணியாளர்கள், ஓய்வு காலத்தில் வருமானம் இன்றி தவிப்பதால், தாங்கள் பணிபுரிந்த கோயிலிலேயே பிச்சை எடுக்கும் நிலை உள்ளதாக, கோயில் பணியாளர்கள் சங்கம் அரசிடம் முறையீடு செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 12 பெரிய கோயில்களும், 200க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களும் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் கோயில்களில், உதவி ஆணையர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்க  வேண்டும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில்களில், வருமானம் 50 லட்சத்தை தாண்டியும், ஒரு கோயிலில் கூட உதவி ஆணையர் அந்தஸ்தில் அதிகாரிகள்  நியமிக்கப்படவில்லை. மாவட்டத்தில், கோயில் பணியாளர்களாக 110 பேர் உள்ளனர். இவர்களில் 50 பேர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். அரசு கணக்குப்படி இன்னும் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். நூறுக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாளர்களே இல்லை.  இதனால், இக்கோயில்களை பராமரிக்க முடியவில்லை. கோயில் சொத்துக்களின் உண்மையான நிலவரம் என்ன? வருமானம் என்ன, என்பதை கூட இந்து சமய அறநிலையத்துறையால் முறையாக கணக்கிட முடியாத நிலை உள்ளது. கோயில் பணியாளர்களை தேவைக்கு ஏற்ப நியமனம் செய்தால் மட்டுமே, இந்த புள்ளிவிவர கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

பல கோயில்களில், பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. 30 முதல் 35 ஆண்டுகள் வரை பணிபுரிந்து விட்டு ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, 750 ரூபாய் மட்டுமே மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது முதியோர் உதவித்தொகையே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், மாத ஓய்வூதியம் 750 ரூபாயை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் கோயில் பணியாளர்கள் தவிக்கின்றனர். சம்பாதிக்க வேண்டிய காலம் முழுவதும் கோயிலில் கழித்து விட்டு, ஒய்வு காலத்தில் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், வேறு வழியின்றி பணிபுரிந்த கோயிலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தற்போது பல கோயில் பணியாளர்கள், அதே கோயிலில் பிச்சைக்காரர்களாக உள்ளனர். கோயில் பணியாளர்களுக்கு சம்பளம், பணி நிரந்தரம் வழங்கி, முறையான ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோயில் பணியாளர்கள் அரசிடம்  வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மலைமேல் வைத்தியநாதர் கோயிலுக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலங்களும், பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலங்களும் உள்ளன. கோயில் செயல் அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால், பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்களை தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர்.

இதில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தோப்புகளை உள்குத்தகைக்கு விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். சில அலுவலர்கள் உடந்தையாக இருப்பதால், யாரிடம் எவ்வளவு தோட்டங்கள் உள்ளன, என்ற விபரம் கூட தெரியவில்லை. பாலசுப்பிரமணியர் கோயிலில், நான்கு நாயன்மார்களுக்கு, ஆண்டுக்கு மூன்று மாதம் முறையே குருபூஜை நடத்த வேண்டும். கோயில் நிலத்தை மூன்றரை ஏக்கர் உழுபவர்கள், அன்னதானம் செய்ய வேண்டும். இதே போல், வைகாசி விசாகத்தன்று, அன்னபோஜானா மண்டபத்தில், 2 ஏக்கர் நிலத்தை உழுபவர்கள் அன்னதானம் கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக இவை நடைமுறை படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் சுவாமி சிலைகள் உட்பட பொருட்கள் எத்தனை உள்ளது, நிலங்கள் எவ்வளவு உள்ளது உள்ளிட்ட விபரங்களை, ஆன்மிக சமூக ஆர்வலர்களிடம் கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். சிலர் முறைகேடாக நடந்து கொள்வதால், கோயில் நிலங்களை பட்டியல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிர்வாக சீர்கேடுகளை களைய, அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar