Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசாணியம்மனுக்கு மயான பூஜை ... காரமடை தேர்த் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்! காரமடை தேர்த் திருவிழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி: ஆன்மிக சுற்றுலா சென்ற உணர்வு கிடைத்தது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
11:02

சென்னை: இந்தியா முழுவதும் ஒரு முறை ஆன்மிக சுற்றுலா சென்ற உணர்வு கிடைத்தது என, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சிக்கு சென்றவர்கள் கூறினர். விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த, 19ம் தேதி துவங்கி, நேற்று நிறைவுற்றது. கண்காட்சியில், 240க்கும் மேற்பட்ட அமைப்புகள், காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஆன்மிகம், தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள், பாரம்பரிய விளையாட்டுகள், இயற்கை உரத்தில், தயாரான விளை பொருட்கள், மூலிகை செடிகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில், புகழ் பெற்ற கோவில்களில் உள்ள, லிங்கங்கள் கண்காட்சியில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரங்கில் இருந்த, பல்லாங்குழி, குச்சி எடுத்தல், தட்டாங்கல், பரமபதம், கிச்சுகிச்சு, தர்பார், பாண்டி போன்ற, விளையாட்டுகளை சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக விளையாடினர். பசுஞ்சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து தயாரான இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவற்றை, வீட்டு தோட்டம் பராமரிப்போர் வாங்கி சென்றனர். மேலும், இயற்கை உரத்தில் தயாரான உணவு பொருட்கள், அழகு சாதனங்களையும் வாங்கினர். திருவோடு, கல்காரம், ருத்ராட்சம், செங்கற்றாழை, பன்னீர்மரம் போன்ற, 500க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் இருந்தன. பெரும்பாலோர் ஒரு மூலிகை செடியையாவது வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. அரங்கத்தின் வெளியே, சிறுவர்களின் பஜனை நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சியை பார்க்க வந்தவர்கள், இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாக, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar