Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நமசிவாய வாழ்க கோஷத்துடன் ... வைத்திக்குப்பத்தில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவான் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
11:02

காட்டம்பட்டியில் கடந்த 13ம் தேதி முத்தோழையுடன், அரவான் திருவிழா துவங்கியது. முத்தோழைக்கு மாவிளக்கு வைத்தல், பூஜை, பூச்சாட்டுதல் ஆகியவை 14ம் தேதி நடந்தது. 18ம் தேதி கோவிலில், கம்பம் நடுதல் மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது. காட்டம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர். 27ம் தேதி அதிகாலையில், சுவாமி அலங்காரத்துடன் மேடைக்கு எழுந்தருளுதல், அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடக்கிறது. மதியம் அரவானுக்கு மாவிளக்கு படைக்கப்பட்டு, வழிபாடு நடக்கிறது. இரவு சாமி பட்டி சுற்றி விளையாடும் வைபவம் நடக்கிறது. 28ம் தேதி காலை அனுமான் அரவானை தேடுதலும், மதியம் சாமி குளத்திற்கு செல்லுதலும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது.காட்டம்பட்டி கணேசர் பஜனை குழுவினரின் பஜனை, பிருந்தாவனம், பெண்கள் கும்மியாட்டம் நடக்கிறது. இரவு சாமி குளத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளுகிறார். இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கலை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலையில் விஸ்வரூப தரிசனமும், சாமி திருவீதியுலாவும், மாலையில் சாமியை கட்டு மரம் சேர்த்துதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar