Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுராவில் இருந்து குருவாயூர் ... கோனியம்மன் கோவிலில் வரும் 6ல் தேரோட்டம்! கோனியம்மன் கோவிலில் வரும் 6ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்க கால தமிழர் ஓவியங்கள் பழநி அருகே கண்டுபிடிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 மார்
2013
10:03

பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலை குகையில், சங்க கால தமிழர் வரைந்த, 10க்கும் மேற்பட்ட ஒவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள, ஆண்டிப்பட்டி மலைக் குகையில், தொல்லியல் ஆய்வாளர், நாராயண மூர்த்தி, கன்னிமுத்து, பழனி சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.குகையில் சங்க காலத் தமிழர், காதலையும், வீரத்தையும், போற்றி வந்ததை குறிப்பிடும், குறிஞ்சி நில மக்களின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு ஓவியத்தில், விழாச் சடங்கிற்காக பெண்கள் கூட்டமாக, பானைகளில் நீர் எடுத்துச் செல்லும் காட்சியும், மற்றொன்றில் பெண்கள், ஆண்கள், குழந்தையுடன் கைகோர்த்து, ஆடிப்பாடும் காட்சியும் வரையப்பட்டுள்ளது. இவ்வகை நடனத்தை பளியர், புலையர் போன்ற, பழங்குடி மக்கள் இன்றளவும் ஆடுகின்றனர். யானை, புலி, முள்ளம் பன்றி போன்ற விலங்குகள், தனி மனித ஆண்,பெண், வேட்டை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.நாராயண மூர்த்தி கூறியதாவது: ஆண்டிப்பட்டி மலைக்குகை ஓவியங்கள், 2,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஒரு ஓவியத்தில் குடும்பத்துடன் எல்லோரும், ஆடு ஒன்றை பலி இடுவதற்காக அழைத்துச் செல்லும் காட்சியும் உள்ளது. மற்றொரு ஓவியத்தில், யானையை அகழி வெட்டி பிடிப்பதை போன்ற காட்சியும், அதன் தொடர்ச்சியாக, ஆண்கள் ங்குசம் கொண்டு, அந்த யானையை அடக்கும் காட்சியும், யானையை பழக்கப்படுத்தி, அதன் மீது அமர்ந்து செல்லும் காட்சியும், தேர்ந்த படக்கதைப்போல (கார்ட்டூன் வடிவத்தில்) வரையப்பட்டுள்ளது. பாதிக்கு மேற்பட்ட ஓவியங்கள், மிக மங்கிய நிலையில், உள்ளதால் அவற்றின் அடையாளம் காண முடியவில்லை. இக்குகையில், சங்க காலத்தமிழர்கள் பயன்படுத்திய, பானை ஓடுகள், நகக்குறி ஓடுகளும் கிடைத்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar