Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி ... காஞ்சிபுரம் செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! காஞ்சிபுரம் செல்லியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திற்பரப்பு மகாதேவர் கோயிலில் 2 ஆயிரத்து 500 சுற்று விளக்குகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2013
10:03

திற்பரப்பு: திற்பரப்பு மகாதேவர் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்று விளக்குகளில் முதன் முறையாக தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் பரசித்திபெற்ற பன்னிரு சிவாலயங்களில் மூன்றாவது கோயில் திற்பரப்பு மகாதேவர் கோயில். இது திற்பரப்பு அருவியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் மேற்கு பகுதியில் கோதையாறு நெளிந்து, தெளிந்து, பரந்து, விரிந்து ஓடுகிறது.மன்னர்கள் காலத்தில் மிகவும் பரமாண்டமாக அமைத்துள்ள இக்கோயிலின் சுற்றம்பலத்தின் வெளிப்புறத்தில் அழிமாடம் அமைத்து, அதில் மூன்று வரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட இவ்விளக்குகள் பெரும்பாலும் சேதமடைந்து காணப்பட்டன. தற்போது புது விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.புது விளக்குகள் பொருத்த கோயில் பாதுகாப்புக்குழுவினர் தீர்மானித்தனர். இரும்பு விளக்குகளை அகற்றி, அழிமாடம் புதுப்பக்கப்பட்டு, பத்தளை விளக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஐந்து வரிசைகளில் 2 ஆயிரத்து 500 பத்தளை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் அனில்குமார் கூறியதாவது: பக்தர்கள் நன்கொடையாக நான்கு லட்சம் ரூபாய் மதிப்பல் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாகப் பொருத்தப்பட்ட விளக்குகளில் முதன் முறையாக தீபம் ஏற்றப்பட்டது. விசேஷ நாட்களிலும், பக்தர்கள் நேர்ச்சையாகவும் இவ்விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். இக்கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முக்கியமாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது கூடுதல் அழகாக, இந்த தீபம் காட்சியளிக்கிறது. இவ்வாறு அனில்குமார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar