Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சுருட்டப்பள்ளி கோவிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத நாராயணசுவாமி கோவிலில் வரும் 24ம் தேதி சூரிய பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
11:03

ஊத்துக்கோட்டை: நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவிலில், ஐந்து நாட்கள் சூரிய பூஜை விழா, வரும் 24ம் தேதி தொடங்குகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலம், நாகலாபுரம் கிராமத்தில் உள்ளது வேத நாராயண சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் மூலவர் நாராயணன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இவ்விழா, இந்தாண்டு வரும், 24ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

சூரிய பூஜை வரலாறு: மகா விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து, கடல் அடியில் பல ஆண்டுகள் அசுரனுடன் யுத்தம் புரிந்ததால், அவரது உடல் மிகவும் குளிர்ச்சி அடைந்தது. அப்போது, அவரது உடல் வெப்பமடைவதற்காக சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களை, அவரது உடலில் விழும்படி செய்கிறார். இது தான் சூரிய பூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது விழாவின் மூன்றாவது நாள் பாதத்திலும், நான்காவது நாள் நாபியிலும் (வயிறு), ஐந்தாம் நாள் சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ராஜகோபுரத்தில் இருந்து, 600 அடி தூரத்தில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து, சுவாமியை திவ்யரூப தரிசனம் அளிக்கச் செய்கிறார் சூரிய பகவான். மாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை இந்த அற்புத காட்சி நடைபெறும்.

தெப்ப உற்சவம்: வரும், 24ம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சியில், 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். முதல் நாளில் சீதா சமேத ராமச்சந்திர சுவாமியும், அடுத்த இரு நாட்கள் வேதவல்லி சமேத வேத நாராயணசுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்விழாவை காண, ஆந்திரா, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar