Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் தீ ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி கோயில் தூக்கத் திருவிழா: 3ம் தேதி துவங்குகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:03

நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் மூன்றாம் தேதி துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது.முதல் நாள் விழாவில் காலை பள்ளியுணர்த்தல், கணபதிஹோமம், ஏழு மணிக்கு பிரதான கோயிலில் மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வருதல், மதியம் அன்னதானம், மாலை தாலப்பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங்காரிமேளம், நாதஸ்வரம், நையாண்டிமேளம், யானை அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளல் நடக்கிறது.கண்ணனாகம், ஸ்ரீதேவிபள்ளி, கீழ்வீட்டு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு, மகாதேவர் சன்னதி ஆகிய இடங்களில் பூஜைகள் பெற்று, அம்மன் வெங்கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளுவார். மாலை திருக்கொடி ஏற்றுதல் நடக்கிறது. துவக்க விழாவிற்கு கோயில் கமிட்டி தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார்.திருவனந்தபுரம் சாந்திகிரி ஆசிரம சுவாமி குருரத்னம் ஞானதபசி குத்துவிளக்கு ஏற்றுகிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சசிதரூர், அமைச்சர் பச்சைமால், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ., கொல்லங்கோடு பஞ்., தலைவர் அருளானந்தன் முன்னிலை வகிக்கின்றனர்.கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கேரள அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சிவகுமார் துவங்கி வைக்கிறார். விழா நாட்களில் தினமும் பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதிஹோமம், தீபாராதனை, அன்னதானம், கலைநிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் நாள் விழாவில் காலை தூக்க நேர்ச்சை பதிவு செய்யப்படுகிறது.நான்காம் நாள் விழாவில் காலை தூக்கம் எழுதி நிறுத்தல், தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது. இரவு தூக்கக்காரர்கள் நீராடி விட்டு பிரதான கோயிலுக்குச் சென்று, வினாயகருக்கு தேங்காய் உடைத்து வெங்கஞ்சி கோயிலில் நமஸ்காரம் செய்தல் நடக்கிறது.தொடர்ந்து ஐந்து நாட்கள் தூக்கக்காரர்கள் காலை ஆறு மணி, மாலை ஐந்து மணி ஆகிய இரு வேளைகளில் தினமும் நமஸ்காரம் செய்கிறார்கள். ஒன்பதாம் நாள் விழாவில் வண்டியோட்டம் நடக்கிறது. பிற்பகல் மூன்று மணிக்கு தூக்கக்காரர்கள் பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி பஞ்சகவ்ய முழுக்கல், கலச பூஜைக்குப் பின், பூரண கும்பத்துடன் கோயிலை வந்தடைகிறார்கள்.மாலை ஆறு மணிக்கு வண்டியோட்டம் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலை ஆறு மணி முதல் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar