Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீர ராகவர் புட்லூர் திருவூரல் ... பண்டசோழநல்லூர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனிபெருந்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:03

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதிசுவாமிகோவில் உள்ளது. திருப்பதி பிரார்த்தனைகளை ஏற்கும் சிறப்புப்பெற்ற தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் நேற்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது. முன்னதாக உற்சவர் பொன்னப்பன் பூமிதேவி சிறப்பு புஷ்பலங்காரத்தில் தங்கக்கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மகாதீபராதனை நடந்தது. அதன்பின் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு இந்திரவிமானத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா நடந்தது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை சூரியபிரபை, ஆதிசேஷன், கருடன், அனுமந்த, யானை என பல்வேறு வாகனகளில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பெருமாள்தாயார் தேசிகனோடு தேரில் எழுந்தருளுகின்றனர். பின் காலை 8 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar