Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் ஈஸ்டர் பண்டிகை! அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பீடம் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
10:04

பழநி: பழநி அருகே, வீரக்குளத்தில், 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, சிலை, பத்ம பீடம் கண்டுபிடிக்கப்பட்டன. பழநி அருகே, ஆயக்குடி ஊர் எல்லையிலுள்ள, வீரக்குளத்தில், வரலாற்று ஆய்வாளர் கன்னிமுத்து, ஆசிரியர்கள் மூவர் கொண்ட குழு, ஆய்வு மேற்கொண்டது. அங்கு, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, அழிந்து போன கோவிலைக் குறிக்கும் கல்வெட்டுகள், சிலை, பத்ம பீடம் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வாளர் கன்னிமுத்து கூறியதாவது: வீரக்குளத்தில் அழிந்து போன கோவிலை குறிக்கும் கல்வெட்டுகள் கிடைத்தன. சில சிதைந்த நிலையிலும், 10 வரிகளைக்கொண்ட ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது. அது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆயக்குடி பட்டளத்து விநாயகர் கோவிலுக்கு, பெரிய திருமண்டபம் அமைத்து கொடுத்த செய்தியை தெரிவிக்கிறது. குளத்தின் மதகு ஓரத்தில், கோவிலின் அழிந்து போன பகுதிகள் சிதறிக் கிடக்கின்றன. மயில் மேல் முருகன் அமர்ந்த நிலையில் உள்ள சிலை, பத்ம பீடம் ஆகியவையும், சேதமடைந்த நிலையில் உள்ளன. இங்கு தனிக்கோவில் இருந்ததா அல்லது ஆயக்குடி சோழீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த பகுதிகளா என்பது குறித்து, ஆய்வு நடக்கிறது. கல்வெட்டில், தேசி விநாயகப் பிள்ளையார், நானா தே திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், ஆயிரவர் ஆகிய பண்டைய வணிகக் குழுக்களின் வார்த்தைகள் உள்ளன. "தேசி என்ற வார்த்தை, வணிக குழுக்களுடன் தொடர்பு உடையது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar