Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ... சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்! சக்திமாரியம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைச்சோறு சேகரித்து வழிபாடு: வறட்சியை விரட்ட நூதனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
10:04

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே மழை வேண்டியும், வறட்சியை விரட்டவும், மழைச்சோறு சேகரித்து, கோவிலில் நூதன வழிபாட்டை மக்கள் நடத்தினர்.கோபி அருகே ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, விவசாயமே பிரதான தொழில். சில ஆண்டாக, பருவமழை பொய்த்ததால், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.அப்பகுதிகளில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது.எனவே, மழை வேண்டி மழைசோறு சேகரித்து, இறைவனுக்கு படைத்து நூதன வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர். நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி, வீடு, வீடாக சென்று, கலயங்களில் பழையசோறு, கஞ்சிகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட மழைச்சோற்றை, மேளதாளத்துடன், கஞ்சி பானையில் சுமந்தபடி, விநாயகர், மாரியம்மன் கோவில்களில் வைத்து வழிபட்டனர்.வழிபாடு முடிந்த பின், சேகரிக்கப்பட்ட பழைய கஞ்சிசோற்றை, விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் கமிட்டி தலைவர் ஆண்டவர், செயலாளர் சதாசிவம், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:கடந்த பத்து ஆண்டுக்கு முன், ஓலபாளையம், சாணார்பாளையம், விரியன்காடு பகுதியில் வறட்சி நிலவியதால், மழைச்சோறு சேகரித்து மக்கள் வழிபட்டனர். சில தினத்திலேயே, மழை வந்ததால், தற்போதும் ஏற்பட்ட வறட்சியை விரட்ட, மழைச்சோறு சேகரித்து வழிபாடு நடத்தினோம்.வழிபாட்டின்போது, சுவாமி ஆடிய இரு சிறுமிகள், "இருதினத்தில் மழை வரும், என, வாக்கு தெரிவித்தனர். எனவே, ஓரிரு தினத்தில் மழை வரும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar