Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழ்சேவூர் ஈஸ்வரன் கோவில் ... காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான புராதன கோவில்: ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
11:04

சங்ககிரி: சங்ககிரியில், 600 ஆண்டு சிறப்பு வாய்ந்த சவுந்திரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில், முதல் முறையாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 90 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது. சங்ககிரியில், சவுந்திரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. 600ஆண்டு பழைமை வாய்ந்த இக்கோவில், அன்றைய மன்னர்கள், வழிப்பாடு நடத்துவதற்காக, போர்கால அடிப்படையில், கோபுரம் இன்றி, கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று சான்றுகள் உள்ளன. தற்போது, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இங்கு, மூலவராக காட்சியளிக்கும், சோமேஸ்வரர், சவுந்திரநாயகி தாயார் மற்றும் முருகபெருமான் ஆகியோர் ஒருசேர கிழக்கு திசைநோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம். கோவிலின் தல விருட்சமாக நாகவள்ளி மரம் அமைந்துள்ளது. அதோடு, நீலாதேவி தாயாருடன், சனிபகவான் ஒருசேர அமர்ந்து, சந்தோஷ சனிபகவான் பெயரில் அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். கால பைரவருக்கு தனி சன்னதி உண்டு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில், சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, பிரதோஷம், அஷ்டமி, நவமி வழிப்பாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. எனினும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், காலபோக்கில், மெல்ல, பொலிவிழந்தது. எனவே, கோவிலை புனரமைத்து, கோபுரம் அமைக்க, பக்தர்கள் ஒருசேர முடிவு செய்தனர். அதற்காக, நிதி வசூலித்து, உபயதாரர்கள் தரப்பில் கோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள், 2010 ஜூன், 4ல் துவங்கப்பட்டது. மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலைகளை கொண்டு, 90 அடி உயரத்தில் கோபுர கட்டுமான திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பணிக்குழு தலைவர் சதாசிவம் கூறியதாவது: கோவிலில், 90 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கும்பணி, உபயதாரர் மூலம் நடந்து வருகிறது. கோபுர திருப்பணிக்கு மட்டும், 91 லட்சம் செலவிடப்படுகிறது. 600 ஆண்டு பழையமான இக்கோவில், பக்தர்கள் தீவிர முயற்சியால், திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்கு உதவி செய்வோர், 98427-66599 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar