Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. ... மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2013
11:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் 37வது ஆண்டு பிரம்மோத்சவ விழாவையொட்டி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலின் சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா, 16ம் தேதி துவங்கியது. மாலை அனுக்ஞை, புண்யாகவாஜனம், வாஸ்துசாந்தி, மிருத்ஸங்கிருகணம் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான, கொடியேற்று விழா நேற்று நடந்தது. காலை 10.00 மணிக்கு, கொடி கம்பத்தில், பூஜிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை முதல் திருவீதி உலா துவங்கியது. வரும் 27ம் தேதி வரை, சிறப்பு அபிஷேக பூஜைகளும், இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தினம் ஒரு அலங்காரத்திலும், வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. இன்று (18ம் தேதி) அன்னபட்சி வாகனத்திலும், 19ம் தேதி அனுமன் வாகனத்திலும், 20ம் தேதி சேஷ வாகனத்திலும், 21ம் தேதி கருட வாகனத்திலும், 22ம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 24ம் தேதி குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 25ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 26ம் தேதி, காலை 6.00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 3.30 மணிக்கு துவாதச ஆராதனமும், மாலை 6.00 மணிக்கு புஷ்பபல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 7.00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன், பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது. கொடியேற்று நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் வெண்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar