Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதிகார நந்தி வாகனத்தில் ... பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபாடு! பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்ணீரையும் பெட்ரோலையும் வீணாக்காதீர்: மாதா அமிர்தானந்தமயி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஏப்
2013
10:04

சென்னை: தண்ணீரையும் பெட்ரோலையும் வீணாக்கக் கூடாது . என்று என, மாதா அமிர்தானந்தமயி அறிவுரை வழங்கினார். சென்னை பிரம்மஸ்தான கோவிலின், 23ம் ஆண்டு விழாவில் மாதா அமிர்தானந்தமயி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி பேசியதாவது: இன்றைய சமூகம், பிரிவினை, சச்சரவுகள் மற்றும் போராட்டங்களை உருவாக்கும் வகையில் மாறியிருக்கிறது. நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஏழு நிறங்கள் குறிப்பிட்ட அளவில், இணையும் போது ஆகாயத்தில் வானவில் தோன்றுகிறது. நிறங்கள் தனித்தனியாக நின்றால், இந்தளவு அழகு இருக்காது. ஒற்றுமையும், சமத்துவமே அழகின் ரகசியங்கள். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை பிள்ளைகள் தவிர்க்க வேண்டும். அன்பை, வாழ்வின் விரதமாகக் கொண்டவர்களே, அச்சமின்றி இருப்பர். அன்பெனும் அச்சில் தான் இவ்வுலகம் சுழல்கிறது. கடந்த, 25 வருடங்களில், 40 சதவீத இயற்கையை அழித்து விட்டோம். பூமியில், பெட்ரோலும், தண்ணீரும் குறைந்து வருகிறது.தண்ணீரையும், பெட்ரோலையும் வீணாக்க கூடாது. மரக்கன்றுகள் நடுவதற்கு அனைவரும் முன் வரவேண்டும். அண்மையில் ,டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்,சமுதாயத்தில் உயர்ந்த கோட்பாடுகள் அழிந்து விட்டன என்பதன் தெளிவாகும். இதுமட்டுமின்றி, இளைஞர்கள், இணைய தளங்களில் சீரழிந்த படங்களை பார்க்கின்றனர். எரியும் தீயில், பெட்ரோலை ஊற்றுவது போல், இது அவர்களிடம், காமத்தீயை அதிகரிக்க செய்கிறது. விவேக புத்தியை இழந்து, தவறான வழிகளில் செல்கின்றனர். நமக்குக் கிடைத்த இந்த வாழ்வை, நமக்கும், உலகுக்கும் பயன்படும் வகையில் வாழவேண்டும். நம் கண்களில், கருணை எனும் மை தீட்டலாம். உதடுகளில் உண்மை பேசுதல் என்ற சாயம் பூசலாம். பரோபகாரம் என்ற மருதாணியால் அழகு செய்யலாம். நடத்தையில், பணிவின் இனிமை சேர்க்கலாம். இதயத்தில் மனித நேயத்தின், இறை அன்பின் ஒளியை, நிறைக்கலாம். இதனால், உலகையும். நம்மையும் மேலும் அழகாக ஆக்கலாம். இவ்வாறு அமிர்தானந்தமயி அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர்வித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை , இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி; காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 71 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar