Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மழை பெய்ய வேண்டி வருண மஹா யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழவந்தி மாரியம்மன் கோவில் குண்டம் விழா 22ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
11:04

மோகனூர்: எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில், ஏப்ரல், 22ம் தேதி, தீக்குண்டம் இறங்கும் விழா, கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 9ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து, தினமும் காலை காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனிதநீராடி தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டுச் செல்கின்றனர். அதை தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நாளை (ஏப்., 21) இரவு, 7 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. ஏப்ரல், 22ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, தீக்குண்டம் பற்றவைக்கப்படுகிறது. காலை, 10 மணிக்கு குமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு, ஸ்வாமியை சப்பரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்படுகிறது.அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக ஐந்து கி.மீ., தூரம் சென்று, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அன்று இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதை தொடர்ந்து, 8 மணிக்கு,சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்ரல், 23ம் தேதி காலை, 6 மணிக்கு கிடா வெட்டு, 9 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், ஸ்வாமிக்கு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மாலை, 4 மணிக்கு மாரியம்மன் ஸ்வாமி தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, தேரை நிலை சேர்க்கின்றனர். ஏப்ரல், 24ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடிங்கி, சிங்காரப்பாலியில் விடுகின்றனர். அன்று மாலை, 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar