Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைப்பாதையில் கிளி ஜோதிடம் பார்க்க ... சவுராஷ்டிரா மொழியில் மகாபாரதம் வெளியீடு! சவுராஷ்டிரா மொழியில் மகாபாரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கி.பி., 7ம் நூற்றாண்டு சிற்பங்கள்: திருக்கோவிலூர் அருகே கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
10:04

விழுப்புரம்: பல்லவர் காலத்தில் உருவான, இரண்டு அய்யனார் சிற்பங்கள், கண்டறியப்பட்டு உள்ளன. திருக்கோவிலூர் அடுத்த நெற்குன்றம் ஆற்றங்கரையில், சிவன் கோவில் உள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள், வீரராகவன், மங்கையர்கரசி, மற்றும் பிச்சைப்பிள்ளை ஆகியோர், இந்த கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஆலமரத்தடியில், அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இதுபற்றி, ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது: பொதுமக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு அய்யனார் சிற்பம், திண்டிவனம் அடுத்த கிளியனூரில் உள்ள தனிக்கோவில் சிற்பத்துடன் ஒத்துப்போகிறது. ஒழுங்கற்ற கற்பலகையில், புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ள அய்யனார் சிற்பம், கிராம காவல் தெய்வமாக காட்சியளிக்கிறது. அய்யனார், வலது காலை தொங்கவிட்டும், இடது காலை குத்திட்டும், உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளது போல், சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் சாட்டை ஒன்று பற்றி, வலது தொடையிலும், இடது கை, கால், முட்டியின் மீதும், ஊர்ந்து செல்வது போல் உள்ளது. இடது பாதத்தின் கீழ், குதிரை ஒன்றும், இடையில் அரையாடை அணிந்தும், அதில் நேர்த்தியான முடிச்சுகளும் அமைந்துள்ளது. வயிற்றின் மீது வயிற்றுக்கட்டும், வயிற்றுக்கடியில் குத்துவாள் ஒன்றும் செருகப்பட்டுள்ளது. மார்பில் புரிநூலும், கழுத்தில் ஆரமும், காதுகளில் பத்திரக் குண்டலங்களும், தலையில் மூன்றடுக்கு கொண்டையுடன், சடாபாரத்துடன் செதுக்கப்பட்டிருப்பது, சிற்பத்திற்கு அழகூட்டுகிறது. இந்த சிற்பம். கி.பி., 10-11ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக இருக்கலாம். இந்த சிற்பத்திற்கு அருகே, உடைந்த பழமையான பல்லவர் கால அரிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டது. இதன் தலை அலங்காரமும், காதணிகளும், கழுத்தில் அணியப்பட்டுள்ள சரபலியும், வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, பல்லவர் கால கலை நயத்தை எடுத்து காட்டுகிறது. இது. கி.பி., 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இவ்வாறு, வீரராகவன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar