Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடைப்பத்தால் அடித்து கோவிலில் ... பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு! பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருவிழாவில் கருங்கல்லில் தோசை சுட்டு படையல் பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேங்கைமரத்து பெரிய நாச்சியம்மனுக்கு, கருங்கல்லில் தோசை சுட்டு படையிலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திகோம்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லிமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற வேங்கைமரத்து பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இக்கோவில் திருவிழா, வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டு விழா, இரண்டு நாட்களுக்கு முன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள பெரிய நாச்சியம்மன் ஸ்வாமிக்கு, பச்சரிசி மாவு, வெல்லம், நெய் கலந்து, கருங்கல்லில் தோசை சுட்டு, படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, செம்மறி ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்விழாவில், நடுபரப்பு, புளியங்காடு, மேட்டூர், புதுவலவு, ஆச்சாவாடி, வால்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar