பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
சித்தாமூர்: நுகும்பல் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில், தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.சித்தாமூர் அடுத்துள்ள நுகும்பல் கிராமத்தில், பொன்னியம்மன் மற்றும் கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். இவ்வாண்டிற்கான விழா, கடந்த, 30ம் தேதி காலை, 7:00 மணி அளவில் நடந்தது.போரூர் மலையிலிருந்து ”னை நீர் கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகமும், சந்தனக் காப்பும் நடைபெற்றது. 11:00 மணிக்கு கங்கையம்மன் வீதியுலா, 1:00 மணிக்கு சாகை வார்த்தலும், அன்னதானமும் நடந்தது.இரவு, 10:30 மணிக்கு வாணவேடிக்கையுடன், பொன்னியம்மன் தேர் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.