Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லப்பம்பட்டி மாரியம்மன் ... இன்று 108 சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி நூதனம் ..துடப்பத்தால் அடி வாங்கிய பெண் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
11:05

ஓசூர்: கெலமங்கலம் அருகே கோவில் விழாவில், குழந்தை வரம் கிடைக்கவும், பேய் பிசாசுகளை விரட்டவும், பூசாரியிடம், முறம், துடப்பத்தால் பெண்கள், அடி வாங்கி நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். கெலமங்கலம் அடுத்த டி.கொத்தப்பள்ளி தர்மராயர் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, மூலவர் தர்மராயர், விநாயகர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பல்லக்கில் தர்மராயர், விநாயகர் தேரில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பக்தர்கள், வாழைபழம், மஞ்சள், குங்குமம், துளசி செடிகளை, தேர் மீது வீசி, ஸ்வாமிகளை வழிபட்டனர். தேர் நிலைக்கு வந்ததும், கரம்மா, காளிகாம்மாள் ஆகிய கிராம தேவதைகளுக்கு, பக்தர்கள் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு வேண்டுதல்கள் நிமித்தமாகவும், கோவில் பூசாரியிடம், தலை மற்றும் முதுகில் முறம், துடப்பத்தால் அடிவாங்கி, நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்களும், தொழில் வளம் பெருக, கடன் பிரச்னைகள் தீர வரிசையில் நின்று பூசாரியிடம் துடப்பத்தால் அடிவாங்கினர். இரவு, 7 மணிக்கு, "குருஷேத்திரம் நாடகம் நடந்தது. இன்று (மே 2) விழாவின் தொடர்ச்சியாக பல்லக்கு உற்சவம், தீ மிதித்தல், கரக திருவிழா நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar