Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ... ரிஷபம்: என்ன சுகம்! என்ன சுகம்! தந்திடுவார் இனிய சுகம்! ரிஷபம்: என்ன சுகம்! என்ன சுகம்! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேஷம்: திகில் திகில் வேண்டுமைய்யா... தில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2013
11:05

திறமையுடன் செயலாற்றி வெற்றி காணும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரித்து, நல்ல பலன்களைக் கொடுத்த குரு, மே28 முதல் மூன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். அவர் தன் பார்வை பலத்தால் 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 7ல் அமர்ந்து 1,4,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று, உகந்த நாலாறெட்டு பத்தீராறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு, தேடிய பொருள் பூமி சேதமாகும்வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாத பித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடிவரும் தீமையது திகல் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா. இதன்படி பார்த்தால், இந்த ஓராண்டு நடவடிக்கைகளும் திகிலாகவே இருக்கும் என்பது உறுதியாகிறது.பொதுவாக குரு மூன்றில் இருந்தால், உறவினர்களின் பகை ஏற்படும். இதுவரை செய்த செயல்களுக்கு பலன் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். தற்போது நடந்து வரும் செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படும். சிலரால் ஏமாற்றப்படவோ, வஞ்சிக்கப்படவோ வாய்ப்புண்டு. கண்டச்சனி 7ம் இடத்தில் இருப்பதால், வாகனம் ஓட்டுவதிலும், பயணத்தின் போதும் நிதானம் தேவைப்படும். ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை தேவைப்படும். பொருளாதார விஷயத்தில் மந்த நிலை இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் உருவாகும். குடும்ப பிரச்னையில் அமைதி காப்பது பிரச்னையைத் தவிர்க்க உதவும்.குரு 3ல் இருப்பதால், மனதில் அதைரியம் உண்டாகலாம் கவனம். இளைய சகோதரர் வகையில் பிரச்னை உருவாக வாய்ப்பிருக்கிறது. இது தற்காலிகமானது தான் என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை படுவதால் தாயின் உடல்நிலைக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். உங்களுடைய உடல்நிலையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கொழுப்புச்சத்து, சர்க்கரை வியாதி, வாதம் தொடர்பாக சிகிச்சை எடுப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் மராமத்துப்பணி செய்யவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு வீட்டை மாற்ற வேண்டியதிருக்கும். வாகன விஷயத்திலும் இருக்கும் வசதியைக் கொண்டு திருப்திப்படுவது நல்லது. பராமரிப்புச் செலவு கூடும். புத்திரர் கல்வி,வேலைவாய்ப்பில் சோம்பல், கவனச்சிதறலால் பின்தங்குவர். பிடிவாத குணத்துடன் நடந்து கொள்ளும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவது அவசியம். கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கடன் வாங்குவது நல்லது. மனைவி ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் சனி, ராகு இருப்பதால் திருமண விஷயத்தில் தடை ஏற்பட்டு விலகும். சுபநிகழ்ச்சி நடத்திட உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்,மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் பிரச்னை வந்த வேகத்தில் மறைந்து போகும்.எதிரிகள் உங்களின் செயல்பாடுகளை நோட்டமிட்டபடி இருப்பர். மறைமுக எதிரிகளாலும் தொல்லையைச் சந்தித்து வருவீர்கள். அக்கம்பக்கத்தினரிடமும் அளவுடன் பழகுவது பிரச்னையை பெருமளவு குறைக்கும்.தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலம் கருதி மருத்துவச் செலவு செய்வீர்கள். உயர்கல்வி பெறுவதற்காக சிலர் வெளியூர், வெளிநாடு சென்று தங்குவர். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கு கடின முயற்சி தேவைப்படும்.லாப ஸ்தானமாகிய 11ல் குருவின் பார்வை படுவதால் பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அவ்வப்போது நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழிகாட்டுதலால் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.

தொழிலதிபர்கள்: தொழிலில் சிரமநிலை இருக்கும். தொழிலாளர்களை வேலை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இயந்திர பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உற்பத்தி சுமாராக இருக்கும். உழைப்பு அதிகம், பலன் குறைவு என்கிற இக்கட்டான நிலை ஏற்படும். 

வியாபாரிகள்: நகை, தானியம், மளிகை, பழம், இனிப்பு, எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பலன் இராது. மற்ற வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் சம்பாதிப்பர். தற்போது இருக்கிற இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வரலாம். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனை வசூலிப்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டி வரும். 

பணியாளர்கள்:  எந்த வேலையை எடுத்தாலும், அதில் தடை தாமதம் என பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாக, அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை செய்து கொள்ளலாம் என ஒத்தி வைத்தால் உங்கள் பாடு திண்டாட்டமாகி விடும்.  சலுகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

பெண்கள்:  குடும்ப பெண்கள் தங்கள் உடல்நலத்தை சரிவர கவனித்துக் கொண்டால் தான் வீட்டுப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். குடும்பச்செலவுக்குத் தேவையான பணம் கிடைக்காது. சில சமயங்களில் நகைகளை அடமானம் வைக்க நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பணிபுரியும் பெண்களை கடுமையான வேலை சிரமப்படுத்தும். அலுவலகத்தில் கடன் பெற நினைப்பதை தற்போதைக்கு ஒத்திவைப்பது நல்லது.

மாணவர்கள்:  இன்ஜினியரிங், சட்டம், தொழில் சார்ந்த படிப்புகளில் உள்ள மாணவர்கள் உடனுக்குடன் பாடங்களைப் படிக்காவிட்டால் தேர்வதற்கு சிரமப்படும். பிற துறையில் உள்ளவர்கள் மறதி காரணமாக அவதிப்படுவர். ஆசிரியர்களுடன் சுமூகமான போக்கு இருந்தால் தான், படிப்பில் நன்மை ஏற்படும். நண்பர்களின் சேர்க்கை உங்களைச் சிரமத்தில் மாட்டி விடலாம். படிக்கும் நேரத்தை அணுவளவும் வீணாக்கக் கூடாது.

அரசியல்வாதிகள்:  உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் கூட அல்லாடும் நேரம் இது. இந்த நேரத்தில், பணத்தைத் தேடி அலைந்தால் சட்டச்சிக்கலில் மாட்டக் கூடும். ஆதரவாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். 

விவசாயிகள்:  விவசாயத்திற்காக விண்ணப்பித்த கடன்தொகை கிடைக்க தாமதமாகும். சாகுபடி செலவு அதிகரிக்கும். உழைக்கிற அளவுக்கு மகசூல் பெறுவது சிரமமே. 

பரிகாரம்:  லட்சுமிநரசிம்மரை வழிபட்டால் தொழில், வேலையில் பிரச்னை குறையும்.

பரிகாரப்பாடல்:
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை : பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம் சிறப்பாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar