Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18 கிராம மக்கள் கொண்டாடிய ... வில்லியனூர் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்! வில்லியனூர் பெருமாள் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான மரத்துக்கு தினமலர் செய்தியால் மறு ஜென்மம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
10:06

திருப்பூர்: திருப்பூரில், மழைக்கு சாய்ந்த 300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் நேற்று மீண்டும் நடப்பட்டது. திருப்பூர், பெருமாநல்லூர்-கணக்கம்பாளையம் ரோட்டில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான அரிய வகை மரமான வன்னி மரம், கடந்த 2ம் தேதி பெய்த மழைக்கு வேருடன் சாய்ந்தது. மரத்தை மீண்டும் நட வேண்டும் என, ஜூன் 3ல் "தினமலர் நாளிதழ் திருப்பூர் இணைப்பில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அம்மரத்தை அப்பகுதி மக்கள், வன்னி ஈஸ்வராக வழிபட்டு வந்துள்ளனர். அதனால், மரத்தை காக்க முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து 7,500 ரூபாய்க்கு மரத்தை ஏலம் எடுத்தனர். புதிய இடத்தில் நட, நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் முன், துணை தலைவர் வீரக்குமார் தோட்டத்தில் இடம் தேர்வு செய்து, 11 அடி அகலம் 10 ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டது. 2 கி.மீ., தூரம் எடுத்துச் செல்ல வசதியாக, மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. இயந்திரங்களின் உதவியுடன் பெரிய லாரியில் ஏற்றி செல்லப்பட்ட மரம், குழியில் நடப்பட்டது. 12 மணி நேர முயற்சிக்கு பிறகு, இரவு 7.00 மணிக்கு மரம் நடவு செய்யப்பட்டது. தாங்கள் வணங்கி வந்த மரம் மீண்டும் நடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு கிலோ மீட்டர் மரம் பயணம் செய்தபோது, வழி நெடுகிலும் திரளான மக்கள், மலர் தூவியும், தண்ணீர் தெளித்தும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். மரத்தை மீண்டும் எடுத்து நடும் பணியில், கணக்கம்பாளையம் கிராம மக்கள், வர்ஷா இன்டர்நேஷனல் பங்குதாரர் ராமசாமி, நிப்ட்-டீ கல்லூரி சேர்மன் ராஜா சண்முகம், கிரீன் அண்டு கிளீன் அமைப்பு, "தினமலர் நாளிதழ் செய்தியை பிரதி எடுத்து, மக்களிடம் நிதி திரட்டிய பொன்சுந்தரம், கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமி சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். "தினமலர் நாளிதழ் செய்தியே, மீண்டும் மரம் நட உந்துதலாக அமைந்ததாக அனைவரும் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar