Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத் குமார் ஆசிரமத்தில் ... திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்! திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி தேவஸ்தானம்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
10:06

திருப்பதி: திருமலை - திருப்பதி தேவஸ்தானம், மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. தேவஸ்தானத்தின், "ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் எனப்படும் எஸ்.வி.பி.சி., "டிவி சேனலின் நிதி மற்றும் அரிசி, நெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல் நிதியில், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக, சர்ச்சைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. தேவஸ்தானத்தின் வரவு, செலவுகளை சரி பார்க்க, இதுவரை, எந்த ஒரு விஜிலென்ஸ் அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை. தேவஸ்தானத்தின், வருமான ஆலோசகரும், தலைமை கணக்கு அதிகாரியும் சமர்ப்பிக்கும் அனைத்து, "பில்களிலும், எவ்வளவு பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படும். நடப்பு, 2013-14ம் ஆண்டில், தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,248 கோடி ரூபாய். இதில், குறிப்பிடப்பட்டுள்ள செலவுகளுக்கும், வரவுகளுக்கும், தேவஸ்தான அதிகாரிகள், சரியான பதில் கொடுக்கவில்லை.எனவே, திருப்பதி தேவஸ்தானத்தை, மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஆந்திர மாநில அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆந்திர அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேவஸ்தானம், அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், ஒரு சில விஷயங்களில், அரசின் ஒப்புதலின்படியே செயல்பட வேண்டும். அதனால், அதை தணிக்கை துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என, ஆந்திர மாநில நிதித் துறையும், அட்வகேட் ஜெனரலும் ஒப்புதல் அளித்துள்ளனர்.முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இதற்கான பைலில் கையெழுத்திட்ட பின், கவர்னர் நரசிம்மனின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்படும். அவர் அனுமதி கிடைத்த உடன் அமலுக்கு வந்து விடும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar