Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளிகோயிலுக்கு பக்தர்கள் இருமுடி ... முன்னாள் போப்பாண்டவருக்கு புனிதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
10:07

ஆழ்வார்குறிச்சி: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கால்நாட்டுதல் வைபவம் நடந்தது. கடையம் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ளது முப்புடாதி அம்மன் கோயில். இக்கோயிலில் வரும் 15ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முப்புடாதி அம்மன் பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கால்நாட்டுதல் வைபவம் நடந்தது.தொடர்ந்து வரும் 11ம் தேதி காலை 5.30 மணியளவில் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜ பூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை நடக்கிறது.12ம் தேதி காலை 8 மணிக்கு துர்க்கா ஹோமம், கன்னிகா பூஜை, ஸ்வாஸினி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ம்ருத்ஸங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், யஜமான வர்ணம், ஆச்சார்ய வர்ணம் நடக்கிறது. 13ம் தேதி காலை 8 மணிக்கு பாபநாசம் தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் 108 கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. பின்னர் அம்மன் ஜலாதி வாஸம், புஷ்பாதி வாஸம் ஆகிய வைபவங்களும், மாலை 5 மணியளவில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம் நடக்கிறது.14ம் தேதி காலை 8 மணியளவில் விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9 மணியளவில் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக நாளான வரும் 15ம் தேதி காலை 7 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹுதியும், 9 மணிக்கு யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடக்கிறது. காலை 9.15லிருந்து 10 மணிக்குள் சாலக்கோபுரம், விநாயகர், முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 11 மணியளவில் மகா அபிஷேகம், 11.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரம், அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், தக்கார் வள்ளியம்மாள் ஆகியோர் மேற்பார்வையில் முப்புடாதி அம்மன் பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar