Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணிக்கவாசகர் குருபூஜை விழா ரமலான் சிந்தனைகள்: மன்னித்து விடுவோமே! ரமலான் சிந்தனைகள்: மன்னித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவிலில் ஆனி திருமஞ்சனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
10:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி வீதியுலாகடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில், மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நகர வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேர் தரிசனம் முடிந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டப முகப் பில் எழுந்தருளச் செய்து, சந்தனம், தேன், பால், இளநீர், விபூதி, பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. லட்சார்ச்சனை பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில், சுவாமிகள் எழுந்தருள செய்து திருவாபரண அலங்கார காட்சி, லட்சார்ச்சனைகள் நடந்தன. பகல் 1:00 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு முடிந்து, 2:20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாத்தியங்கள் முழங்க, சுவாமிகளின் திருநடன காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar