Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி மேல சங்கரன்கோயிலில் ... சோதனைக்குழாய் குழந்தை பற்றி.. ஆன்மிகமும் அறிவியலும்! சோதனைக்குழாய் குழந்தை பற்றி.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுநாராயணப்பெருமாள் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
10:07

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் ÷காயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு சுவாமி, தேவியர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.இவ்வைபவத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் அணிந்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அவற்றிற்கு டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன் தலைமையில் பக்தர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமியும், தேவியர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக கோயில் மணப்பந்தலுக்கு அழைத்து வரப்பட்டனர். சுவாமிக்காக சீர்வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து மணப்பந்தலுக்கு கொண்டுவந்தனர். அதன்பின் சுவாமி தேவியர் இருவருக்கும் மாலைகள் மாற்றி தாலி அணிவித்தார். பக்தர்கள் அட்சதை தூவி வணங்கினர். சென்னை டி.வி.எஸ். குழும அதிபர்கள் சரத்விஜயராகவன், பத்ரிவிஜயராகவன் முன்னிலையில் நலுங்கு வைபவம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி, தேவியர் கோயில் மையமண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர். பக்தர்களுக்கு திருமண விருந்து நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar