Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி ... ரக்ஷா பந்தன் விழாவுக்காக பெண்களுக்கு இலவச பேருந்து! ரக்ஷா பந்தன் விழாவுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
10:08

சென்னை: சென்னையில், கர்நாடக இசைக் கலைஞர், செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், நாடு முழுவதும் உள்ள, கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின், திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி, இவ்விழாவை நடத்துகிறது.

செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், இம்மாதம், 30, 31, செப்டம்பர், 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின், திருவனந்தபுரம் தரங்கிணிஸரி இசைப் பள்ளி, இவ்விழாவை நடத்துகிறது. இதில், கர்நாடக இசையின், பிரபல கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். செம்பை வைத்தியநாத பாகவதரின் பிரதான சீடர்களும் பங்கேற்க உள்ளனர். 80 வயதை தாண்டிய, கர்நாடக இசை உலகின் மூத்த பிரபல, கலைஞர்கள் விழாவில், கவுரவிக்கப்பட உள்ளனர். இம்மாதம், 30ம் தேதி நடக்கும் விழாவில், குரல் பிரிவில், கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன்; வயலின் - அனந்தராமன்; மிருதங்கம் - மெட்ராஸ் கண்ணன்; தம்புரா - லட்சுமி நாராயணன்; நாதஸ்வரம் - ராஜண்ணா, தவில் - பொறையாறு வேணு பிள்ளை ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இம்மாதம், 31ம் தேதி நடக்கும் விழாவில், குரல் பிரிவில், பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீகாந்தன், தஞ்சாவூர் சங்கர ஐயர்; மிருதங்கம் - டி.கே. மூர்த்தி; நாதஸ்வரம் - அச்சல்புரம் சின்னத்தம்பி; தவில் - ராமலிங்கம், தம்புரா - வெங்கட்ராமன்; ஆர்மோனியம் - பல்லடம் வெங்கட்ராமன ராவ், ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. செப்டம்பர், 1ம் தேதி, குரல் பிரிவில், மணக்கல் ரங்கராஜன், திருப்பூத்திருத்தி வெங்கடேசன், சுப்ரமணியன்; வயலின் - கிருஷ்ணன்; மிருதங்கம் - காரைக்குடி சந்திரமவுலி; நாதஸ்வரம் - நடராஜன்; தவில் - பாலு; ஜலதரங்கம் - அனயம்பட்டி கணேசன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும், கோபால கிருஷ்ணன், ஜெய விஜயன், நெடனூரி கிருஷ்ணமூர்த்தி, பிரசாலா பொன்னம்மாள் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், ராஜேஷ் வைத்யா, பின்னணி பாடகி மஹதி, கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோரின், இசைக் கச்சேரியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar