Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வெட்டு தகவல்களை பரப்ப வேண்டும்! சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் சக்தி கோஷம் முழங்க :மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
10:08

அவிநாசி: ஓம் சக்தி பராசக்தி கோஷம் ஒலிக்க, ராயம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் விநாயகர், மாரியம்மன் கோவில் திருப்பணி செய்யப்பட்டும், ஆகாசராயருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டும், நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கிய அவ்விழாவில், நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை நிறைவு கால பூஜைகளுக்குபின், சிவாச்சாரியார்கள் கும்பங்களை எடுத்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.அதன்பின், விநாயகர், மாரியம்மன், ஆகாசராயர் சன்னதி கோபுரங்களுக்கு ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவ மூர்த்தி சன்னதிகளிலும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகத்துக்கு பின், மலர் அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. திருப்புக்கொளியூர் ஆதீன மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலை வகித்து, ஆசியுரை வழங்கினார்.கும்பாபிஷேக பூஜைகளை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த அன்பு கிருபாகர சுப்ரமணியம் தலைமையில், சுந்தரேச குருக்கள், ராமநாமநாதசிவம், அருணந்தி சிவம், அர்விந்தாக்ஷ சிவம் ஆகியோர் மேற்கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar